புகாரளிக்க வந்த பெண்ணை, "மசாஜ்" செய்ய வைத்த போலீஸ் அதிகாரி..!
பீகார் மாநிலத்தில், காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வந்த பெண்ணை, மசாஜ் செய்ய வைத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெளஹட்டா பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வந்த பெண்ணை, அங்கிருந்த உயரதிகாரி சஷிபூஷன் சின்ஹா மசாஜ் செய்யும் படி கூறியுள்ளார்.
காவலர் குடியிருப்பில், சட்டை அணியாமல் அமர்ந்திருக்கும் சஷிபூஷனுக்கு அப்பெண்மணி மசாஜ் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகின.
இதையடுத்து சஷிபூஷனை பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார்.
Comments